நாயாறு கடற்காயல்
நாயாறு கடற்காயல் என்பது இலங்கையின் வடமேற்குப் பகுதியான முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கயவாய் கடற்காயல் ஆகும். இந்தக் கடற்காயலுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகும் நாயாறு உட்பட பல சிறு ஆறுகளில் இருந்து நீர் வருகின்றது. இந்த கடற்காயலின் நீர் உவர் நீர் ஆகும். நாயாறு கடற்காயற் பகுதி தென்னை, பனை மரங்களினாலும், அடர்ந்த காடுகளினாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நிலம் இறால் மீன்பிடிப்புக்காகவும், நெல் பயிரிடுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இக்கடற்காயலில் அலையாத்திக் காடும், கடற்புல் பாத்திகளும் காணப்படுகின்றன. இங்குள்ள பகுதிகளுக்கு நீள் சிறகு கடற்பறவை, வாத்து, ஆலா போன்ற நீர்ப்பறவைகள் உட்பட மேலும் பலவகைக் கடற்கரைப் பறவைகளும் ஏராளமாக வருகின்றன.
Read article
